Home One Line P1 சினி இடைத்தேர்தலை அம்னோ எளிதாகப் பார்க்காது- வேட்பாளர் ஜூன் 18 அறிமுகம்

சினி இடைத்தேர்தலை அம்னோ எளிதாகப் பார்க்காது- வேட்பாளர் ஜூன் 18 அறிமுகம்

536
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சினி இடைத்தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு தரப்பினரையும் அம்னோ எளிதாக எடுத்துக் கொள்ளாது என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

” அது அம்னோவின் கோட்டையாகும். ஆயினும், அம்னோவை எதிர்த்து போட்டியிடப் போகும் தரப்பினரை அது எளிதாக எடுத்துக் கொள்ளாது.” என்று அவர் கூறினார்.

“யார் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை கட்சி முடிவெடுக்கும்.” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இதனிடையே சினி இடைத்தேர்தலில் அம்னோவைப் பிரதிநிதித்து போட்டியிடப் போகும் வேட்பாளர் யார் என்பதை வருகிற ஜூன் 18-ஆம் தேதி கட்சி அறிவிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

சினி இடைத்தேர்தல் வருகிற ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அபு பக்கர் ஹாருண் மாரடைப்பு காரணமாக அண்மையில் மே 7-ஆம் தேதி காலமானதை அடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த 14 – வது பொதுத் தேர்தலில் அபு பக்கர் சுமார் 7, 675 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொவிட்-19-க்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் காலக்கட்டத்தில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.