பெட்டாலிங் ஜெயா: டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றொரு நபர் காவலில் வைக்கப்பட்டார்.
தம்பி @ வினோத் என்ற புனைப்பெயர் கொண்ட என். விக்னேஸ்வரர் என்ற அந்நபர் திங்கட்கிழமை இரவு (ஜூன் 29) ரவாங் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
செவ்வாய்க்கிழமை தொடங்கி அந்த நபர் மீது ஏழு நாள் தடுப்புக் காவல் உத்தரவை காவல் துறையினர் பெற்றுள்ளதாக சிலாங்கூர் காவல் துறையின் உதவி ஆணையர் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.
“மேலதிக விசாரணைகளுக்கு உதவ மற்றொரு சந்தேக நபருக்கு ஏழு நாள் தடுப்புக் காவல் நீட்டிப்பையும் நாங்கள் பெற்றுள்ளோம்.” என்று அவர் செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
விசாரணையில் உதவ தம்பி @ வினோத் என்ற என். விக்னேஸ்வரரை காவல் துறையினர் தேடுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஜாலான் ராவாங்-பெஸ்தாரி ஜெயாவுக்கு வெளியே உள்ள புதர்களில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் 10-ஆம் தேதி இங்குள்ள பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் மெது ஓட்டத்தில் இருந்த போது அவர் கடத்தப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரில் டத்தோ பட்டம் பெற்ற ஒரு தொழிலதிபரும், ஒரு வழக்கறிஞரும் அடங்குவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.