Home One Line P1 மியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி

மியான்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 162 பேர் பலி

721
0
SHARE
Ad

யங்கோன்: மியான்மாரில் ஒரு பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் குறைந்தது 162 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு, மியான்மார் தீயணைப்பு சேவைகள் துறை 162 சடலங்களை மீட்டுள்ளதாகவும், காயமடைந்த 54 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இம்முறை ஏற்பட்ட இந்த நிலச்சதிவில் மரணமுற்றோரின் எண்ணிக்கை மிக மோசமானதாக அறியப்படுகிறது. 2015- இல் 113 இதே போன்ற ஒரு சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

“மாணிக்கைக் கல் சுரங்கத் தொழிலாளர்கள் மண் அலைகளால் மூடப்பட்டனர். அதிக மழையால் இது ஏற்பட்டது.” என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனுக்கு வடக்கே 600 மைல் தொலைவில் உள்ள கச்சின் மாநிலத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. கச்சின் உலகின் மிகவும் இலாபகரமான பச்சை மாணிக்கக் கல் சுரங்கத் தொழிலின் மையமாகும்.

மியான்மரின் மாணிக்கைக் கல் தொழில் 2014- இல் 31 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில், மண்ணின் சரிவில் இருந்து தப்பிக்க சுரங்கத் தொழிலாளர்கள் மேல்நோக்கி ஓடுவதைக் காணமுடிகிறது.