Home 13வது பொதுத் தேர்தல் போர்ட் கிள்ளான் சட்டமன்றத்திற்கு பிகேஆர் வேட்பாளராக அப்துல் காலிட் தேர்வு

போர்ட் கிள்ளான் சட்டமன்றத்திற்கு பிகேஆர் வேட்பாளராக அப்துல் காலிட் தேர்வு

613
0
SHARE
Ad

Tan Sri Abdul Khalid Ibrahim

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – பொதுத்தேர்தலில் போர்ட் கிள்ளான் சட்டமன்றத்தில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட , சிலாங்கூர் மாநில நடப்பு மந்திரி பெசாரான டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அப்துல் காலிட் கூறுகையில், “வரும் பொதுத்தேர்தலில் போர்ட் கிள்ளான் சட்டமன்றத்திற்கு பிகேஆர் வேட்பாளராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். ஆனால் அத்தொகுதி மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. எனவே நாளை அத்தொகுதி மக்களைச் சந்தித்து அவர்கள் பிரச்சனைகள் குறித்தும், நான் போட்டியிடுவது குறித்தும் கலந்து ஆலோசிக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

#TamilSchoolmychoice

நான் போர்ட் கிள்ளானில் போட்டியிடும் பட்சத்தில்,எனது நடப்பு சட்டமன்ற தொகுதியான ஈஜோக்கில் வாழும் மக்கள் அனைவரும், அங்கு பிகேஆர் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு தங்கள் ஆதரவைத் தந்து மக்கள் கூட்டணியை மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும்.

கடந்த தேர்தலில், போர்ட் கிள்ளான் தொகுதியில் ஒரு சரியான  வேட்பாளரை தேர்வு செய்ய மக்கள் கூட்டணி தவறி விட்டது. எனவே இந்த முறை அந்த தவறு நடக்காமல், அத்தொகுதி மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே பொதுத்தேர்தலில் அப்துல் காலிட் தனது நடப்பு நாடாளுமன்ற தொகுதியான பண்டார் துன் ரசாக் மற்றும் போர்ட் கிள்ளான் சட்டமன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ட் கிள்ளான் தொகுதி வாக்காளர் நிலவரம்,

port klang state seat