Home One Line P1 எஸ்ஆர்சி: நிக் பைசால் ஹாங்காங்கில் உள்ளார்

எஸ்ஆர்சி: நிக் பைசால் ஹாங்காங்கில் உள்ளார்

492
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட்டின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நிக் பைசால் அரிப் காமில் ஹாங்காங்கில் தலைமறைவாக உள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

அவர் மீது அனைத்துலக காவல் துறை, சிவப்பு அறிவிப்பை பிறப்பித்துள்ளதால் நிக் பைசாலைக் கைது செய்ய, காவல் துறை ஹாங்காங் அதிகாரிகளின் உதவியை நாடியதாக அவர் கூறினார்.

“சிவப்பு அறிப்பு வெளியிட்டப் பிறகு அந்நாட்டிலுள்ள அதிகாரிகள் சம்பந்தப்பட்டவரை கைது செய்வது அவர்களின் பொறுப்பு. நாங்கள் ஹாங்காங்கில் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு விவரங்களை அனுப்பியுள்ளோம், ஆனால் அவர்களின் ஆரம்ப பதில்கள் எதிர்மறையாக இருந்தன.

#TamilSchoolmychoice

“இவை நாம் எதிர்கொள்ளும் சில தடைகள்” என்று அவர் நேற்று புக்கிட் அமானில் கூறினார்.

நிக் பைசாலின் குடும்பமும் ஹாங்காங்கில் இருப்பதாக அறியப்பட்டதாக அப்துல் ஹாமிட் கூறினார். மேலும், ஜோ லோ உட்பட மற்றவர்களை வேட்டையாடுவது இன்னும் நிறுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஜோ லோ இன்னும் தேடப்படும் நபராகக் கருதப்படுகிறார்.

“இருப்பினும், நான் குறிப்பிட்டுள்ளபடி, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அறிந்திருந்தாலும் காவல் துறையினர் சில தடைகளை எதிர்கொள்கின்றனர்,” என்று அவர் கூறினார்.