Home One Line P1 சிலிம் சட்டமன்ற உறுப்பினர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

553
0
SHARE
Ad

ஈப்போ: நேற்று புதன்கிழமை மறைந்த சிலிம் சட்டமன்ற உறுப்பினரின் உடல் இன்று காலை 9.20 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரின் மரணத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

“நானும் குடும்பத்தாரும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். ” என்று முகநூலில் பிரதமர் பதிவிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மறைந்த டத்தோ முகமட் குசாய்ரி அப்துல் தாலிப் சிறந்த தலைவர் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இனம், மதம் பாராமல் அனைவருக்கும் உதவும் மனம் படைத்தவர் என்று அவர் கூறினார். அவரது மரணம் அம்னோவிற்கு பேரிழப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜிப்பும் மறைந்த அம்னோ தலைவருக்கு தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். முகமட் குசாய்ரி உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்ற படங்களையும் நஜிப் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

சிலிம் சட்டமன்ற உறுப்பினர் நேற்று பிற்பகலில் பகாங் பெந்தோங்கில் காலமானார்.

அவர் தஞ்சோங் மாலிம் அம்னோ பிரிவுத் தலைவருமாவார்.

பேராக் அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ சாரணி முகமட் பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

அவானா கென்திங் ஹைலேண்ட்ஸ் கோல்ப் அண்ட் கன்ட்ரி ரிசார்ட்டில் கோல்ப் விளையாடும் போது, 59 வயதான முகமட் குசைரி திடீரென சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மாரடைப்பால் காலமானார் என்று பின்பு தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று சட்டமன்ற உறுப்பினர் காலமானச் செய்தி மாநில, மத்திய அம்னோ தலைவர்களின் சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் பகிரப்பட்டன.