Home One Line P1 கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் இல்லை- ஜாவி தொடரப்படும்!

கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் இல்லை- ஜாவி தொடரப்படும்!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கணிதம், அறிவியலை ஆங்கிலத்தில் கற்பிக்கும் எண்ணம் கல்வி அமைச்சுக்கு இல்லை.

செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜி எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சர் டாக்டர் ராட்சி ஜிடின் இவ்வாறு கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்கள் மீண்டும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

தாம் ஒரு மலாய்க்காரர் என்றும், மலாய் மொழியை நேசிப்பதாகவும் கூறியிருந்தார். எவ்வாறாயினும், நாட்டின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு தொழில்துறை மொழியாக ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தையும் மகாதீர் வலியுறுத்தியிருந்தார்.

“தொழிலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மொழி ஆங்கிலம். ஆங்கிலத்தில் அறிவியலைப் புரிந்து கொள்ளாதவர்கள் கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் புரிந்துகொள்வது நிச்சயமாக கடினம்.”

“இன்றும் கூட, ஆங்கிலத்தில் சரளமாக இல்லாதவர்கள் வேலை தேடலாம். அனைத்துலக அறிவியல் மாநாடுகள் தவறாமல் நடத்தப்படுகின்றன. ஆங்கிலம் பொதுவாக மாநாட்டு மொழியாகும்.”

“நம் விஞ்ஞானிகள் ஆங்கிலம், அறிவியலில் சரளமாக இல்லாவிட்டால், விவாதத்தை புரிந்து கொள்வது சாத்தியமில்லை” என்று அவர் கூறியிருந்தார்.

தற்போது, கல்வி அமைச்சு மீண்டும் அந்த இந்த திட்டத்தைக் கைவிட்டுள்ளது.

இதனிடையே, தமிழ், சீனப்பள்ளிகளில் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான ஜாவி பாடம் தொடரப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

பெற்றோர் ஆசிரியர் சங்கம் அனுமதியுடன் தேசிய வகைப் பள்ளிகளில் இப்பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, நான்காம் வகுப்பு மலாய் பாடப்புத்தகத்தில் ஜாவி பாடம் இடம் பெறுவது குறித்து சமீபத்தில் சர்ச்சைகள் எழுந்தன.

பெரும்பாலான பெற்றோர்கள் இந்த பாடத்தினை தமிழ், சீனப்பள்ளிகளில் போதிப்பதை எதிர்த்து வந்தனர்.

முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், இந்த நடவடிக்கை சீன,  தமிழ்ப்பள்ளிகளில் இஸ்லாமியமயமாக்கலை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.