Home One Line P2 லம்போர்கினியில் ரஜினி, வசதியிலும் எளிமை என இரசிகர்கள் பாராட்டு

லம்போர்கினியில் ரஜினி, வசதியிலும் எளிமை என இரசிகர்கள் பாராட்டு

743
0
SHARE
Ad

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஒரு நீல நிற லம்போர்கினி காரை ஓட்டும் புகைப்படம் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அதில் அவர் முகக்கவசம் அணிந்திருக்கிறார். வழக்கம் போல் வெள்ளை நிற உடையணிந்து அவர் காணப்படுகிறார்.

இந்த படம் இணையத்தில் பரவலாகி இரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. பலர் எப்போதும் போல விமர்சித்து வரும் நிலையில், அவருக்கே உண்டான இரசிகர்கள் கூட்டம் பல மீம்ஸுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

வசதியான காரிலும் எளிமையைக் கடைப்பிடித்துள்ளார் என்ற கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.

தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

படத்தின் 50 விழுக்காடு பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் படம் குறித்த அடுத்த தகவல்கள் எப்போது வரும் என இரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த புகைப்படம் தற்போது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கொவிட்19 தொற்றுக் காரணமாக, 2021-இல் ஜூன் மாதத்திற்குப் பிறகு இதன் வெளியீடு தள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.