Home One Line P1 அம்னோ தேசிய கூட்டணியில் இணையாதது பாஸ் கட்சிக்குத் தெரியாது!

அம்னோ தேசிய கூட்டணியில் இணையாதது பாஸ் கட்சிக்குத் தெரியாது!

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசியக் கூட்டணியில் இணைய மட்டோம் என்று அம்னோ கூறியது குறித்து பாஸ் கட்சிக்கு அறிவிக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ தக்கியூடின் ஹசான் கூறினார்.

மாறாக, முவாபாக்காட் நேஷனலை வலுப்படுத்த அம்னோவும் பாஸ் கட்சியும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அண்மையில் அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.

இந்த விவகாரம் “எதிர்காலத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது குறித்து அம்னோவின் அழைப்பிற்காக பாஸ் காத்திருக்கிறது” என்று தக்கியுடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சி 15-வது பொதுத் தேர்தல் வரை பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

“ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாங்கள் (இஸ்லாமிய கட்சியாக), வாக்குறுதியைக் கடைப்பிடிக்கிறோம்.

“இந்த அரசாங்கத்தை பலப்படுத்துவதும், பாதுகாப்பதும் எங்களுக்கு பொறுப்பு” என்று அவர் கூறினார்.

தேசியக் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணையப்போவதில்லை என்று கட்சி முடிவு செய்துள்ளதாக சாஹிட் ஹமிடி முன்பு தெரிவித்திருந்தார்.

அவரைப் பொறுத்தவரை, தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது மக்களவையில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் மட்டுமே உள்ளதாகக் கூறினார்.

“ஜூலை 24 அன்று நடந்த கூட்டத்தில் உச்சமன்றம் தேசிய கூட்டணியில் சேர வேண்டாம் என்ற முடிவு செய்திருந்தது. இந்த முடிவில், அம்னோ, பாஸ் மற்றும் தேசிய முன்னணி கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருப்பது போல, முவாபாக்காட் நேஷனலில் இருப்பதே சிறந்த தளமாகும்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.