Home One Line P1 ஆதாரங்கள் இருந்தால், குவான் எங் வழக்குகள் தொடரப்படும்

ஆதாரங்கள் இருந்தால், குவான் எங் வழக்குகள் தொடரப்படும்

523
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய ஆதாரங்கள் இருந்தால், முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் ஆடம்பர வீடு வாங்கிய விசாரணையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மீண்டும் திறக்கலாம். அதற்கு அந்த உரிமை உண்டு என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோ தகியூடின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஊழல் தடுப்பு ஆணையம் சுதந்திரமாக செயல்படும் அமைப்பு என்பதால் அதற்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறினார்.

“ஊழல், அதிகார அத்துமீறல் மற்றும் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்

#TamilSchoolmychoice

“இந்த வழக்கில் புதிய சான்றுகள் இருந்தால் விசாரணையை மீண்டும் திறக்க எந்த தடையும் இல்லை” என்று அவர் அகமட் பாட்லி ஷாரி (பாஸ்-பாசிர் மாஸ்) விடுத்த கேள்விக்கு பதிலளித்தார்.

லிம் குவான் எங் இரண்டு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஒன்று விவசாய நிலத்திலிருந்து குடியிருப்பு நிலமாகப் பரிமாற்றம் செய்ததற்காக இலஞ்சம் கோரியக் குற்றம் சாட்டப்பட்டது, மற்றொன்று, ஓர் ஆடம்பர வீட்டை சந்தை விலையை விட குறைந்த விலையில் வாங்கியக் குற்றத்திற்காகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தவிர, பினாங்கு மாநில அரசாங்கத்தால் 6.3 பில்லியன் ரிங்கிட் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாகவும் லிம் ஊழல் தடுப்பு ஆணையத்தால் அழைக்கப்பட்டுள்ளார்.