Home One Line P2 கோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி...

கோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்

1147
0
SHARE
Ad

கோழிக்கோடு – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்து குறித்த ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு;

  • அந்த விமானம் தரையிறங்கும்போது கடும் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் விபத்து ஏற்பட்டது.
  • துபாய் நகரிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்கியது.
  • B-737 இரக விமானமான இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதில் இரண்டாகப் பிளந்தது.
  • விமானத்தில் 185 பயணிகள் இருந்தனர். அவர்களைத் தவிர 6 விமானப் பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர்.
  • விமானத்தின் விமானி விபத்தில் மரணமடைந்தார். அவரது துணை விமான கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • இதுவரையில் இருவர் மரணமடைந்துள்ளனர்.
  • பலர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றாலும், சுமார் 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இறுதியான மரண எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

(மேலும் விவரங்கள் தொடரும்)