Home One Line P1 வெங்கடசாமி மறைவுக்கு விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்

வெங்கடசாமி மறைவுக்கு விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்

735
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெர்லிஸ் மாநில ம.இ.காவின் முன்னாள் தலைவர் வெங்கடசாமி காலமானது தொடர்பில் ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

பெர்லிஸ் மாநில ம.இ.கா வழி மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியிருந்த வெங்கடசாமி துன் டாக்டர் சாமிவேலு, டத்தோஸ்ரீ பழனிவேல், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் ஆகியோரின் கீழ் சிறப்பான சேவையை வழங்கியிருந்ததாக  விக்னேஸ்வரன் கூறினார்.

அதேநேரத்தில் நான் ம.இ.கா தேசியத் தலைவராக பதவி ஏற்ற பிறகும் தமது சேவையை மிகவும் சிறப்பான வகையில் தொடர்ந்த வெங்கடாசலம் மறைவு ம.இ.காவிற்கும் இந்திய சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும் என்று விக்னேஸ்வரன் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

ம.இ.கா மட்டுமன்றி, எழுத்துத் துறையிலும் ஈடுபாடு கொண்டிருந்த வெங்கடாசலம் “கனவில் பூத்த கற்பனை பூக்கள்” உள்ளிட்ட பல நூல்களை எழுதி, எழுத்துத் துறைக்கும் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாக விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் பாராட்டினார்.

பெர்லிஸ் மாநில ம.இ.கா வழி சிறந்த சேவை வழங்கிய வேங்கடாசலம் அவர்களை இழந்து துயறுரும் அவர்தம் குடும்பத்திற்கு விக்னேஸ்வரன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.