Home One Line P1 முன்னாள் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் கைது

முன்னாள் அமைச்சரின் அந்தரங்கச் செயலாளர் கைது

621
0
SHARE
Ad

புத்ராஜெயா: ஊழல் விசாரணைக்கு உதவ முன்னாள் அமைச்சரின் முன்னாள் உதவியாளர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

29 வயதான அந்த சந்தேக நபரை, சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) தடுத்து வைக்க நீதிபதி ஷா வீரா அப்துல் ஹலீம் உத்தரவிட்டார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன்னாள் உதவியாளரை ஆகஸ்ட் 20 வரை ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவைப் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் உதவியாளரின் வருங்கால மனைவி என நம்பப்படும் 28 வயதான ஒரு பெண்ணும் அவருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மாதங்களாக “காணாமல் போன” பின்னர் இருவரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) மாலை 5 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்தில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நபர் முன்னாள் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ முகமடின் கெட்டாபியின் அந்தரங்கச் செயலாளராக பணியாற்றினார்.

90 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு திட்டத்தைப் பாதுகாக்க உதவுவதற்காக சந்தேகநபர் ஒரு நிறுவனத்திடமிருந்து 3.7 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகக் கூறப்படுகிறது.

விளம்பர நிறுவனமான, சம்பந்தப்பட்ட அந்த நிறுவனம் குறித்தும் எம்ஏசிசி விசாரணை நடத்தியது.