Home One Line P1 “பாப்பா பாடும் பாட்டு” – குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலக இயங்கலைக் கருத்தரங்கு

“பாப்பா பாடும் பாட்டு” – குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலக இயங்கலைக் கருத்தரங்கு

1780
0
SHARE
Ad

கோலாலம்பூர் : முரசு நிறுவனமும் வைகறைக் கூடமும் மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத்துடன் இணைந்து குழந்தை பாடல்கள் குறித்த அனைத்துலகக் கருத்தரங்கு ஒன்றனை ஏற்பாடு செய்துள்ளன.

“பாப்பா பாடும் பாட்டு” எனும் தலைப்பில் இந்த அனைத்துலகக் கருத்தரங்கம் இயங்கலை மூலம் பின்வரும் வகையில் நடைபெறும்:

நாள் : 22.08.2020 [சனிக்கிழமை]
நேரம் : காலை மணி 10:30 முதல் 12:30 வரை
தளம் : https://www.youtube.com/c/vaigaraistudios (YouTube)
https://facebook.com/mozikkalvi (Facebook)

இந்த இயங்கலைக் கருத்தரங்கம் பற்றிய கூடுதல் விவரங்கள் பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

ஏற்பாடு : முரசு நிறுவனம், வைகறைக் கூடம்,
மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம்

ஆதரவு : தமிழ்மொழிக் காப்பகம் (மலேசியா)
தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு (சிங்கப்பூர்)
உலகத் தமிழ்க் கல்விக்கழகம் (கலிபோர்னியா)
மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச்சங்கம் (ஆஸ்திரேலியா)
கனடாத் தமிழ்க் கல்லூரி (கனடா)

நோக்கம் : பாடல்கள் மொழி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகின்றன என்பதைப் பற்றியும், வகுப்பறைகளிலும் இல்லங்களிலும் பாடல்களைக் கொண்டு குழந்தைகளுக்கு எவ்வாறு மனமகிழ்வு நடவடிக்கைகளை நடத்தலாம் என்பது குறித்தும் கருத்தரங்கில் கருத்தாடல்கள் இடம்பெறும்.

பங்கேற்பு : கருத்தரங்கில் மழலையர் பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களோடு ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

நெறியாளர் : திரு. முத்து நெடுமாறன்
முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் நிறுவனர்

மேல் விவரம் :

http://mozikkalvi.com
https://fb.com/mozikkalvi
https://selliyal.com/archives/216304
https://youtube.com/c/vaigaraistudios

மழலையர் கல்வியிலும் குழந்தைகளின் மொழி வளர்ச்சியிலும் பாடல்களின் பயன்பாடு பற்றியும் பங்களிப்பு பற்றியும் இந்தக் கருத்தரங்கின் வழி அறிந்து பயன்பெறலாம்.

கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும். ஆசிரியர்களின் பணித்திற மேம்பாட்டுக்கு இந்த நற்சான்றிதழ் பயன்படும். மலேசிய ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் பயிற்சி நிருவாகத் [SPLKPM] தளத்தில் இந்த நற்சான்றிதழைப் பதிவு செய்யலாம்.

“பாப்பா பாடும் பாட்டு” இயங்கலைக் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள் கொடுக்கப்பட்ட கூகுள் படிவத்தின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளவும். முன்பதிவுக்கான இறுதிநாள் 20.08.2020.

முன்பதிவுக்கு : https://mozikkalvi.com/register

பள்ளிகளின் ஆசிரியர்கள் அனைவரும் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தப்படுகின்றனர். இதன் மூலம் ஆசிரியர்கள் தங்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதை உறுதிப்படுத்த்திக் கொள்ள முடியும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்தக் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி வலையரங்கக் கல்விக்குழுவினர் ஏற்பாட்டுக் குழுவினருக்கு பல வகையிலும் உதவிக் கரங்களை நீட்டி வருகின்றனர் என்றும் ஏற்பாட்டாளர்கள் நன்றியுடன் தெரிவித்தனர்.

மேல்விவரங்களுக்கு 019-665 9018 எனும் செல்பேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.

“பாப்பா பாடும் பாட்டு” இயங்கலைக் கருத்தரங்கத்தின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் முத்து நெடுமாறன் இந்தத் தகவல்ளைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தரங்கம் குறித்த முன்னோட்டக் காணொளியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: