கோலாலம்பூர் : தொழில்முனைவோருக்கான கணக்கியல் பயிற்சி (Workshop) ஒன்று நாளை திங்கட்கிழமை செப்டம்பர் 7-ஆம் தேதி இரவு 7.30 முதல் 9.30 மணி வரை இலவசமாக நடைபெறும்.
இந்நிகழ்ச்சி, தலைநகரில் No.40-1, ஜாலான் துன் சம்பந்தன் 3, பிரிக்பீல்ட்ஸ் எனும் முகவரியில் உள்ள அர்த்த ஞான மைய அரங்கில் நடைபெறும்.
இப்பயிற்சியில், உங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவிக் குறிப்புகள், நிறுவன மற்றும் தனிநபருக்கான வரியை எவ்வாறு கணக்கிடுவது, வணிக மற்றும் தனிப்பட்ட வங்கிக் கடனை எவ்வாறு பெறுவது, கணக்கியல் பதிவுகளை வைத்திருக்க தேவையான ஆவணங்கள், Sdn Bhd vs Enterprise என்பதில் என்ன வித்தியாசம், தனிநபர் வருமான வரி (எல்.எச்.டி.என்) அறிவிப்பது எப்படி என்பது போன்ற அம்சங்கள் இடம் பெறும்.
இப்பயிற்சியை மேலாண்மை சேவைகளின் நிர்வாக இயக்குநர் திரு. ராஜ் நடத்துவார்.
மேலும் முத்தாய்ப்பாக இந்நிகழ்ச்சியில் வாட்ஸ்எப் (Whatsapp) வணிகர்கள் எவ்வாறு அவர்களின் பொருட்களை வாங்கவும் விற்கவும் முடியும் என்பது பற்றிய விளக்கத்தை லிட்டில் இந்தியா ஷாப்ஸ் மலேசியா போர்ட் டெல் நிறுவனர் வி.சங்கர் தனது உரையில் வழங்குவார். வாட்ஸ்எப் குறுஞ்செயலி மூலம் வணிகம் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்ள இந்தியர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
வி.சங்கர் மலேசியா இன்டர்நேஷனல் டிஜிட்டல் தொழில்முனைவோர் மையத்தின் (MiDEC) ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.
மேலும், பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கும் இவர் பதிலளிப்பார்.
இந்த இலவச நிகழ்ச்சியில் இத்தகையதொரு அரிய வாய்ப்பினை அனைவரும் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
மிகவும் பயன்மிக்க இந்த விளக்கக் கூட்டம் பற்றிய மேல்விபரங்களுக்கு www.arthanyana.org என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம் அல்லது 012-3025643, 012-2717776 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.