கோலாலம்பூர்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது அதிகார எல்லைக்குட்பட்ட கோயிலில் 13 சிலைகளை சேதப்படுத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட கோயில் குழுத் தலைவருக்கு கீழ்நிலை நீதிமன்றம் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.
2019-ஆம் ஆண்டு ஜூலை 15- ஆம் தேதி காலை 8 மணியளவில் இங்குள்ள ஜாலான் இந்தான் பத்து 3-½, சுங்கை பெசியில் உள்ள ஸ்ரீ மகா காளியம்மன் வீரகணபதி கோயிலில் சிலைகளை சேதப்படுத்த இரும்பு கம்பியைப் பயன்படுத்திய எம்.பாலசுப்பிரமணியம் (40) என்பவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் ஜானா அசாஹ்ரா அரிபின் இந்த தீர்ப்பினை வழங்கினார்.
இதனால் ஏற்பட்ட சேதம் 57,100 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எந்தவொரு வழக்கறிஞரும் தம்மை பிரதிநிதிக்காத பட்சத்தில், பாலசுப்பிரமணியம் குறைந்த தண்டனைக்கு மேல்முறையீடு செய்தார். தாம் செய்திட்ட தவறுக்காக வருத்தம் தெரிவித்தார்.
“அந்த நேரத்தில் நான் அழுத்தத்தில் இருந்ததால் சிலைகளை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொள்கிறேன். என் பிரார்த்தனைகளுக்கு பதில் கிடைக்கவில்லை. எனது உறவினர் கடந்த ஜூலை (2019) புற்றுநோயால் இறந்தார்,” என்று அவர் திங்களன்று (செப்டம்பர் 7) நீதிமன்றத்தில் கூறினார்.