Home One Line P2 இந்தியா சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு

இந்தியா சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு

659
0
SHARE
Ad

புது டில்லி: கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

அங்கு இந்திய சீன துருப்புக்கள் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. இப்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அரசாங்கத் தொடர்புள்ள வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய தற்காப்புப் படையும், சீன இராணுவத்திற்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சீன தற்காப்பு அமைச்சகம் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

#TamilSchoolmychoice

“இந்திய இராணுவம் திங்களன்று பாங்கோங் த்சோ ஏரியின் தென் கரைக்கு அருகிலுள்ள ஷென்பாவ் மலையில் சட்டவிரோதமாக எல்லையைக் கடந்தது” என்று சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஜாங் சுய்லி கூறினார்.

சீன வீரர்கள் இந்திய நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் “எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுகள்” சுடப்பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட பரிமாற்றம் இருந்ததாகவும் இந்த சம்பவத்தைப் பற்றி குறிப்பிடுகையில், இந்திய இராணுவத்தின் வட்டாரம் கூறியது.

திங்களன்று நடந்த இந்த சம்பவம் முதல் தடவை ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் இல்லை என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 31 அன்று, இதே போன்ற ‘எச்சரிக்கை துப்பாக்கிச் சூடுகள்’ பரிமாற்றம் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.