Home One Line P2 ‘உத்தம புத்திரன்’ நடிகர் மாரடைப்பால் காலமானார்

‘உத்தம புத்திரன்’ நடிகர் மாரடைப்பால் காலமானார்

792
0
SHARE
Ad

ஹைதராபாத்: ஆந்திரா குண்டூரில் செவ்வாய்க்கிழமை காலை தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74.

குணச்சித்திரப் பாத்திர நடிகராகவும், நகைச்சுவை நடிகராகவும், ஜெயபிரகாஷ் நடித்துள்ளார்.

பிரம்மபுத்ருது திரைப்படத்துடன் அவர் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கி உள்ளார். பிரேமிஞ்சுகண்டம் ரா, கபார் சிங், சென்னகேசவரெட்டி, சீதைய்யா மற்றும் டெம்பர் ஆகியப் படங்களும் அவருக்கு விருதுகளையும் அங்கீகாரத்தையும் அளித்தவையாகும்.

#TamilSchoolmychoice

அல்லகடாவில் வசிக்கும் ஜெயபிரகாஷ் ரெட்டி, தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

அவரது நடிப்பில், நடிகர் தனுஷ் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வெளியான ‘உத்தம புத்திரன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கி, தமிழ் திரைப்பட சூழலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக மாறினார்.

தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகர்கள் தங்கள் இரங்கலை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.