Home One Line P1 கொவிட்19: புதிதாக 45 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: புதிதாக 45 சம்பவங்கள் பதிவு

792
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று மதியம் 12 மணிவரை, கொவிட்19 தொற்றுக் காரணமாக பதிவான சம்பவங்கள் 45 எண்ணிக்கையை எட்டியது. இதன் மூலமாக, நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த கொவிட்19 தொற்று எண்ணிக்கை 9,628-ஆக உயர்ந்தது.

இன்று 24 பேர் குணமடைந்து வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,167-ஆக அதிகரித்துள்ளது.

9 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவர்களில் 5 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்றைய, தொற்று சம்பவங்களில் 44 சம்பவங்கள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1 சம்பவம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

உள்நாட்டில் பதிவான 44 சம்பவங்களில், 11 பேர் மலேசியர்கள். கெடாவில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சபாவில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 33 பேர் சபாவில் தொற்றுக் கண்ட வெளிநாட்டினர் ஆவர்.