Home One Line P1 செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”

1344
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இத்தனை ஆண்டுகளில் செல்லியல் வழங்கி வந்த எத்தனையோ செய்திகளில் “செல்லியல் பார்வை” எனும் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் தனித்துவமிக்கவை.

கூர்மையும், ஆழமும், வரலாற்று அம்சங்களையும் உள்ளடக்கியிருந்த அவை, பரவலான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.

செல்லியல் தளத்தின் தனித்துவமாக விளங்கிய “செல்லியல் பார்வை” எனும்  தலைப்பிலேயே அரசியல், சமூகம் முதலிய கோணங்களின் ஆய்வுப் பார்வைகளை, காணொலி வடிவில் அனைத்துத் தளங்களிலும் இனி வழங்கவிருக்கிறோம்.

#TamilSchoolmychoice

இன்று கொண்டாடப்படும் மலேசியா தினத்தை முன்னிட்டு அந்த சிறப்பு வாய்ந்த தினம் உருவானது ஏன்? எப்படி உருவானது? என்பது போன்ற சுவாரசியமான வரலாற்று சம்பவங்களை உள்ளடக்கிய காணொலியை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: