Home One Line P1 அஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன

அஸ்மின் அலி, ஹில்மான் அலுவலகங்கள் ஊராட்சி மன்றத்தால் கைப்பற்றப்பட்டன

548
0
SHARE
Ad

ஷா ஆலாம்: பிகேஆர் கட்சியின் இரண்டு முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் இன்று ஊராட்சிமன்ற அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

இந்த அலுவலகம் முன்பு அஸ்மின் அலி மற்றும் ஹில்மான் இடாமின் சேவை மையமாக இருந்தது.

அஸ்மின் கோம்பாக் நாடாளுமன்றம் மற்றும் புக்கிட் அந்தராபங்சா சட்டமன்ற உறுப்பினராவார். அதே நேரத்தில் ஹில்மான் – அஸ்மினின் அரசியல் செயலாளரும், கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

#TamilSchoolmychoice

பிகேஆரிலிருந்து விலகி இப்போது தேசிய கூட்டணியில் இணையத் தேர்ந்தெடுத்த இரண்டு பிரதிநிதிகளின் நிலையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

“சேவை மையத்தை கைப்பற்றி என்னை வெளியேற்றுவதற்காக சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் மாநில அரசு எடுத்த நடவடிக்கை கோம்பாக் செத்தியா சட்டமன்ற மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

“சேவை மையம் என்பது மக்கள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் தேவைப்படும் மக்களைச் சந்திப்பதற்கான அலுவலகம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்டபோது அவர் சம்பந்தப்பட்ட வளாகத்தில் இல்லை என்று ஹில்மான் கூறினார். அவர் இப்போது சபாவில் இருப்பதாகக் கூறினார்.

“நான் இனி நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், அஸ்மினும் நானும் கோம்பாக் மக்களுக்கு சேவைகளையும் உரிய உதவிகளையும் செய்கிறோம்.

“நம்பிக்கைக் கூட்டணியை ஆதரிக்காததற்காக மந்திரி பெசார் மற்றும் மாநில அரசு என்னை தண்டிக்க விரும்பினால், அவர்கள் என்னை எதிர்கொள்ள வேண்டும். மக்களையும் கோம்பாக் செத்தியா வாக்காளர்களையும் தண்டிக்கக்கூடாது” என்று அவர் கூறினார்.