கோலாலம்பூர் : “செல்லியல் பார்வை” எனும் பெயரில் அரசியல், சமூகப் பார்வைகள், உலக அரசியல் நடப்புகள் குறித்த கட்டுரைகள் செல்லியலில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 16) முதல் “செல்லியல் பார்வை” கட்டுரைகள் காணொலி வடிவிலும் செல்லியல் தளங்களில் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.
முதல் காணொலியாக “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?” எனும் காணொலி கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி பதிவேற்றம் கண்டது.
காண்க:செல்லியல் பார்வை காணொலி : “மலேசியா தினம் உருவானது ஏன்? எப்படி?”
அதைத் தொடர்ந்து அமெரிக்கத் துணையதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசின் தமிழ் நாட்டுப் பின்னணி, அவரது தாயாருடனான அவரது நெருக்கம், அதே சமயம் அவருக்கும் அவரது தந்தை டொனால்ட் ஹாரிசுக்கும் இடையில் உறவு முறிந்தது ஏன் என்பது போன்ற சுவாரசியமான பின்னணிகளைக் கொண்ட காணொலி இன்று வெள்ளிக்கிழமை இடம் பெறுகிறது.
கமலா ஹாரிஸ் குறித்த அந்தக் காணொலியைக் கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: