Home One Line P1 காரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்

காரில் உறங்குபவர்களுக்கு எச்சரிக்கை- ஒருவர் இன்னமும் கவலைக்கிடம்

1049
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: பட்டர்வொர்த்தில் மற்ற மூன்று பேருடன் காரில் தூங்கியதில் கார்பன் மோனாக்சைடு நச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துவான்கு மிசான் ஆயுதப்படை மருத்துவமனையில் ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் தெரபி (HBOT) சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட நோர் அகிலா முகமட் சப்வான், 21, இன்னும் கண்காணிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது நிலைமையில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும் மலேசிய ஆயுதப்படை  (ஏடிஎம்) தலைமையகம் கூறியது.

#TamilSchoolmychoice

“பாதிக்கப்பட்டவர் பினாங்கு செபெராங் ஜெயா மருத்துவமனையில் இருந்து துவாங்கு மிசான் மருத்துவமனைக்கு சம்பவம் நடந்த தேதியில் மாற்றப்பட்டார்.

“பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த முன்னேற்றத்திற்காக பிரார்த்தனை செய்ய ஏடிஎம் அனைத்து மலேசியர்களையும் அழைக்கிறது. மேலும் இந்த சோதனையை எதிர்கொள்வதில் அவரது குடும்பத்தினருக்கு ஊக்கமும் பலமும் கிடைக்கட்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 16-ஆம் தேதி பட்டர்வொர்த் சாமா காகாவில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, காரில் தூங்கியதால் கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக நோர் அகிலாவின் இரட்டையர் உட்பட மூன்று பெண்கள் இறந்தனர்.

இந்த சம்பவத்தில் ஷெரீபா பரிஷா சையத் பாத்தி, அயுனி ஷஸ்வானி ஷாப்ரி மற்றும் நோர் ஆதிலா ஆகியோர் பலியானார்கள்.

21 வயதான இவர்கள் அனைவரும் மலேசிய தின விடுமுறையின் போது ஜெரெஜாக் தீவுக்குச் சென்றிருந்தனர். அவர்கள் சுங்கை பட்டாணி மற்றும் குருணில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும் வழியில் வாகன நிறுத்துமிடத்தில் ஓய்வு எடுக்க முடிவு செய்து காரிலேயே உறங்கியதால் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இச்செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பலர் இதுபோன்று தாங்கள் உறங்கி உள்ளதாகவும், இது தங்களுக்குமான ஓர் எச்சரிக்கை சம்பவம் என்றும் கூறி வருகின்றனர்.