Home One Line P1 சபாவில் தொற்றுக் குழுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சபாவில் தொற்றுக் குழுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட 82 சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

82 சம்பவங்களில், 10 சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை” என்று அவர் கூறினார். 72 சம்பவங்கள் உள்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிலையில், 60 சம்பவங்கள் மலேசியர்களை உள்ளடக்கியது. 12 பேர் வெளிநாட்டினர்.

இதற்கிடையில், கொவிட்19- இன் 60 புதிய சம்பவங்களால், சபாவில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பதாக அவர் கூறினார். மேலும் செம்போர்னா பாங்காவ்-பாங்காவ் எனும் புதிய தொற்றுக் குழு பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“செம்போர்னா மருத்துவமனையில் நோயாளிகளை பரிசோதித்ததன் விளைவாக இந்த தொற்றுக் குழு அடையாளம் காணப்பட்டது.

“செப்டம்பர் 21 அன்று மொத்தம் ஐந்து சம்பவங்கள் கொவிட்19 தொற்றுக்கு சாதகமாகக் கண்டறியப்பட்டன

“நான்கு பேர் மலேசியர்கள். ஒருவர் மலேசிய அல்லாதவர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செம்போர்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

நேற்று, ஆறாவது தொற்றுக் குழு, தொங்கோட் கண்டறியப்பட்டது.