Home One Line P1 11 அமானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு

11 அமானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாருக்கு ஆதரவு

612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய அரசாங்கத்தை அமைப்பதில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் எடுத்த நடவடிக்கைக்கு கட்சியைச் சேர்ந்த 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு உறுதிப்படுத்தினார்.

கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அன்வார் அறிவித்த பின்னர் முகமட் சாபுவின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

“நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்ததை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். இன்று புதிய அரசாங்கத்தை உருவாக்க பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

“முந்தைய நம்பிக்கைக் கூட்டணி மன்றம் முடிவு செய்தபடி, அனைத்து 11 அமானா நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரின் தலைமையை முழுமையாக ஆதரிப்பதாகவும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான நம்பிக்கையை அவருக்கு அளிப்பதாகவும் அமானா உறுதி அளிக்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாடாளுமன்ற கலைப்பு குறித்த அறிவிப்பு இருக்கும் என்ற ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கொவிட்19 தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை அறிவித்து பிரதமர் தமது உரையை முடித்தார்.