Home One Line P1 ‘அன்வார் தனது பெரும்பான்மையை முறையாக அறிவிக்க வேண்டும்’- பிரதமர்

‘அன்வார் தனது பெரும்பான்மையை முறையாக அறிவிக்க வேண்டும்’- பிரதமர்

621
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் தனது பெரும்பான்மையை நிரூபிக்காத வரை தாம்தான் நாட்டின் பிரதமர் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

“இது நிரூபிக்கப்பட வேண்டும். மத்திய அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட செயல்முறை மற்றும் முறைகளுக்கு ஏற்ப இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

“இந்த செயல்முறையை தவிர்த்தால், டத்தோஸ்ரீ அன்வாரின் அறிக்கை வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும்

#TamilSchoolmychoice

“வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை, தேசிய கூட்டணி அரசாங்கம் இன்னும் உறுதியாக நிற்கிறது. நான் முறையான பிரதமர்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், இன்று பிற்பகலில் பிரதமர் இது குறித்து அறிவிப்பு ஒன்றை அறிவிப்பார் என்ற ஊகங்கள் இருந்தன. ஆனால், அவர் கொவிட்19 பாதிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் உதவுவதற்கான உதவித் தொகை திட்டங்களை அறிவித்தார்.

முன்னதாக, புதிய ஆட்சியை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மையை தாம் பெற்றுவிட்டதாக அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

மலாய், இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து இனங்களையும் கொண்ட அரசாங்கத்தை தாம் அமைக்க இருப்பதாக அவர் கூறினார்.  இந்த அறிவிப்பின் மூலம் பிரதமர் மொகிதின் யாசினின் ஆட்சி கவிழ்ந்ததாகவும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

எனினும் தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எண்ணிக்கையை பகிரங்கமாகத் தெரிவிக்க அன்வார் மறுத்து விட்டார்.

மிகக் குறுகியப் பெரும்பான்மையைத் தான் கொண்டிருக்கவில்லை என உறுதிபடத் தெரிவித்தார் அன்வார். எனினும், மாமன்னர் மீது கொண்டிருக்கும் மரியாதை காரணமாக முதலில் அவரிடம் எனக்கு ஆதரவு தெரிவிக்கும் பட்டியலைச் சமர்ப்பித்த பின்னரே நான் பகிரங்கமாகத் தெரிவிப்பேன் என்றும் அன்வார் கூறினார்.

“நான் ஐந்து அல்லது பத்து உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. மிக வலுவான, மிக அதிகமானப் பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறேன்” என்றும் அன்வார் தன்னம்பிகையுடன் கூறினார்.