Home One Line P2 விஜயகாந்திற்கு கொவிட்19 தொற்று, மருத்துவமனையில் அனுமதி

விஜயகாந்திற்கு கொவிட்19 தொற்று, மருத்துவமனையில் அனுமதி

753
0
SHARE
Ad

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (68) நேற்று இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல் நிலை சரி இல்லாததால் அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜயகாந்துக்கு கொவிட்19 தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜய்காந்த், கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவல்கள், தேமுதிக கட்சி தொண்டர்களுக்கும், அவரது இரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், விஜய்காந்திற்கு கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் மருத்துவமனை நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்தின் இரசிகர்கள், தொண்டர்கள் டுவிட்டர் மற்றும் சமூக ஊடகங்களில் #PrayForVijayakanth என்ற ஹேஷ்டேக்கை பகிரத் தொடங்கியுள்ளனர்.