Home One Line P1 பிற கட்சிகளுடன் அன்வார் இணைவது எதிர்பாராதது- குவான் எங்

பிற கட்சிகளுடன் அன்வார் இணைவது எதிர்பாராதது- குவான் எங்

840
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், காபுங்கான் பார்ட்டி சரவாக்கை (ஜி.பி.எஸ்) நம்பிக்கைக் கூட்டணியுடன் இணையுமாறு சமாதானப்படுத்த முடிந்தது என்ற எண்ணத்தில் தாம் இருந்ததாக ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது புதிய திட்டங்களை அறிவிப்பதற்கு முன்னர், அன்வார் தமது திட்டங்கள் குறித்து தம்மிடம் கூறியதாக லிம் கூறினார்.

நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், அன்வார், மாமன்னரை சந்திக்க தனக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினார், இருப்பினும் திங்களன்று மாமன்னர் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் (ஐ.ஜே.என்) அனுமதிக்கப்பட்டதால் இது ஒத்திவைக்கப்பட வேண்டியிருந்தது. அரண்மனை தரப்பும் இந்த விவகாரத்தை உறுதி செய்தது.

#TamilSchoolmychoice

“ஜி.பி.எஸ் அவருக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணத்தை அன்வார் கொடுத்தார். ஜி.பி.எஸ் உடன், குறைந்தது 120 நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், ” என்று லிம் குறிப்பிட்டார்.

அன்வாரின் அறிவிப்பைத் தொடர்ந்து, அன்வாரின் திட்டத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்து, பிரதமர் மொகிதின் யாசின் நிர்வாகத்திற்கு அதன் பிளவுபடாத ஆதரவை மீண்டும் வலியுறுத்தி, ஜி.பி.எஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது.

பின்னர், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, அன்வாருக்கு ஆதரவளிப்பதை வெளிப்படுத்தினார். ஆனால், அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் உட்பட பிற அம்னோ தலைவர்கள் அன்வாரின் அறிவிப்பை “ஏமாற்று வேலை” என்று நிராகரித்தனர்.

ஜி.பி.எஸ் தவிர, வேறு கட்சிகளுடன் நம்பிக்கைக் கூட்டணிடன் இணைவது “எதிர்பாராதது” என்று லிம் கூறியுள்ளார்.

“நான் இதைச் சொல்ல விரும்புகிறேன். ஜி.பி.எஸ் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். (மக்கள்) மற்ற கட்சிகளைப் பற்றி பேசியபோது, ​​இது எதிர்பாராத ஒன்று, ” என்று அவர் கூறினார்.

அம்னோவில் சர்ச்சைக்குரிய நபர்களுடன் எந்த ஒப்பந்தங்களும் செய்யப்பட மாட்டாது என்று அன்வார் முன்பு உறுதியளித்ததாக ஜசெக தலைவரான லிம் கிட் சியாங் கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.