சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இந்திய நேரப்படி மதியம் 1:04- க்கு காலமானார்.
பாலு மற்றும் எஸ்.பி.பி என பிரபலமாக அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனது குரலால் மில்லியன் கணக்கான மக்களை கவர்ந்தவர்.
சென்னை மருத்துவமனையில் கொவிட் -19 க்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவர் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 74.
ஏறக்குறைய 55 ஆண்டுகால வாழ்க்கையில் 40,000- க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய எஸ்.பி.பி, ஆகஸ்ட் 5 முதல் எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் எங்கும் பரவியிருக்கும் இந்தியர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலந்து, காலமெல்லாம் கானம் பாடி மகிழ்வித்த பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததாக நேற்று மருத்துவமனை தெரிவித்திருந்தது.