Home One Line P2 இராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி

இராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி

828
0
SHARE
Ad

கெய்வ்: விமானப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற உக்ரேனிய இராணுவ விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமான விழுந்ததை அடுத்து தீப்பிடித்தது. அதில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று நாட்டின் அவசர சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

28 பேரைக் கொண்ட அன்-26 விமானம், தலைநகர் கெய்விலிருந்து கிழக்கே 400 கி.மீ (250 மைல்) தொலைவில் உள்ள சுஹுவில் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து ஒரு இராணுவ விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ (1.2 மைல்) தொலைவில் நடந்ததாக உக்ரேனின் மாநில அவசர சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“22 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டு பேர் காயமடைந்தனர், நான்கு பேரைத் தேடும் நடவடிக்கை தொடர்கிறது,” என்று அது கூறியது.

விமானத்தில் இராணுவக் குழு இருந்ததாகவும், விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் தற்காப்பு அமைச்சினால் நடத்தப்படும் நிறுவன மாணவர்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் காணாமல் போன நான்கு பேருக்கான தேடல் தொடர்கிறது என்று துணை உள்துறை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்தார்.