Home One Line P1 ‘ஹாஜிஜி சிறந்த முறையில் பணியாற்றுவார்’- மூசா அமான்

‘ஹாஜிஜி சிறந்த முறையில் பணியாற்றுவார்’- மூசா அமான்

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 16- வது முதல்வராக பதவியேற்ற டத்தோ ஹாஜிஜி முகமட் நூரை முன்னாள் சபா முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் இன்று வாழ்த்தினார்.

மூசா 14- வது முதல்வராக இருந்தபோது தனது தலைமையில் அமைச்சராக பணியாற்றிய ஹாஜிஜி, தனது பணிக்கு எப்போதும் முழு அர்ப்பணிப்பையும், நிபுணத்துவத்தையும் கொடுத்திருப்பதாக மூசா இன்று ஓர் அறிக்கையில்,கூறினார்.

“அவர் இரக்கமுள்ளவர். அவர் ஒரு உறுதியான தலைவர், பயமோ உதவிவோ இல்லாமல் முடிவுகளை எடுக்க முடியும்.

#TamilSchoolmychoice

“அவரது அறிவுடனும், பரந்த அனுபவத்துடனும், சபாவை வழிநடத்தும் திறன் அவருக்கு உள்ளது என்று நான் நம்புகிறேன். மக்களுக்கு தேவையான பொருளாதார மறுமலர்ச்சியையும், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியையும் கொண்டுவருவார்” என்று மூசா கூறினார்.

முன்னதாக, இன்று காலை சபா தேசிய கூட்டணி தலைவர் ஹாஜிஜி நூர்  மாநிலத்தின் 16- வது முதல்வராக பதவியேற்றார்.

65 வயதான ஹாஜிஜி, ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஜூஹார் மஹிருடின் முன்னிலையில் பதவியேற்றார்.

ஹாஜிஜிக்கு சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின், ஸ்டார் தலைவர் ஜெப்ரி கிதிங்கான் மற்றும் பிபிஎஸ் துணைத் தலைவர் ஜோசிம் குன்சலாம் ஆகிய மூன்று பிரதிநிதிகள் உதவுவார்கள்.

வீட்டுவசதி மற்றும் ஊராட்சி அமைச்சராக புங் மொக்தார் பணியாற்றுவார். கிதிங்கான், வேளாண்மை மற்றும் மீன்வளத்துறை அமைச்சராகவும், ஜோசிம் சபா தொழில்துறை மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்படுவார்.

தேசிய கூட்டணி, தேசிய முன்னணி இடையே யார் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற போட்டியில், நேற்று ஹாஜிஜி முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது.