Home One Line P2 கொவிட்19: உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் பாதிப்பு

கொவிட்19: உலக மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் பாதிப்பு

560
0
SHARE
Ad

ஜெனீவா: 10 பேரில் ஒருவருக்கு கொவிட்19 தொற்று ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் உலக மக்களில் பெரும்பாலோர் நோய்த்தொற்றின் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்று அது தெரிவித்துள்ளது.

இந்த தொற்றுநோய் குறித்த சரியான மற்றும் துல்லியமான தகவல்களை வழங்குவதில் சீனா தோல்வி அடைந்ததாக அமெரிக்கா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவன அவசர நிபுணர் மைக் ரியான் கூறினார்.

“ஆனால், எங்கள் அனைத்துலக பொறுப்புகளை நிறைவேற்ற சீனா எப்போதும் வெளிப்படையாக செயல்படும். ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார அமைப்பின் அனைத்து மட்டங்களுடனும் சீனா நெருங்கிய உறவைப் பேணுகிறது.” என்று சீன தேசிய சுகாதார ஆணையத்தின் ஜாங் யாங் கூறினார்.

#TamilSchoolmychoice

தென்கிழக்கு ஆசியாவில் தொற்றுநோய்கள் அதிகரித்து வருவதாகவும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் கிழக்கு மத்தியதரைக் கடலிலும் சம்பவங்கள், இறப்புகள் அதிகரித்து வருவதாகவும் ரியான் கூறினார்.

“எங்கள் தற்போதைய மதிப்பீடு என்னவென்றால், உலக மக்கள் தொகையில் சுமார் 10 விழுக்காட்டினர் இந்த தொற்றால் பாதிக்கப்படலாம். இது நாடு, நகரத்திற்கு உட்பட்டு மாறுபடும். ஆனால், உலகின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஆபத்தில் உள்ளன என்பதைக் காட்டுகின்றன, ”என்று ரியான் கூறினார்.

“நாம் ஒரு கடினமான நேரத்தை நோக்கி செல்கிறோம். இந்த நோய் தொடர்ந்து பரவுகிறது, ” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள உணவு சந்தையில் தோன்றியதாக நம்பப்படும் இந்த நச்சுயிரி விலங்குகளிடமிருந்து வந்தது என்று உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற நிபுணர்கள் தெரிவித்தனர்.