Home One Line P1 கொவிட்19: குழந்தையின் மரணம் வேதனையளிக்கிறது- அன்வார்

கொவிட்19: குழந்தையின் மரணம் வேதனையளிக்கிறது- அன்வார்

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று கொவிட்19 தொற்றுக்குப் பலியான ஒரு வயது குழந்தையின் மரணத்தால் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் வருத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குழந்தையின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

“நேற்று கொவிட்19 தொற்றுக்கு காலமானவர்கள் குறித்து கவலைப்படுகிறேன். அதில் ஒரு வயதுக் குழந்தையும் அடங்கியுள்ளது

#TamilSchoolmychoice

“குடும்பத்தினர் கடைசியாகப் பார்த்து முத்தமிட முடியாதபோது இது மிகவும் மன வேதனையை அளிக்கிறது” என்று அன்வார் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் இன்று பதிவிட்டார்.

நேற்று, நாடு வரலாற்றில் மிக அதிகமான கொவிட்19 தொற்று சம்பவங்களைப் பதிவு செய்தது. ஒரு வயது குழந்தை உட்பட நான்கு இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.