Home One Line P1 கோலசிலாங்கூரில் அக்டோபர் 13 நீர் விநியோகத் தடை

கோலசிலாங்கூரில் அக்டோபர் 13 நீர் விநியோகத் தடை

715
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலசிலாங்கூரில் 28 பகுதிகளில் அக்டோபர் 13- ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 10 மணி வரை திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படும்.

அடைப்பான் (valve) மாற்றுப் பணிகளுக்காக சுங்கை சிரே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்படுவதால், இந்த இடையூறு ஏற்படும் என்று ஆயர் சிலாங்கூர் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பாசெரி தெரிவித்தார்.

“சுங்கை சிரேவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் அடைப்பான் மாற்றுப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. ஆலை நல்ல முறையில் இயங்குவதற்கும் அனைத்து உபகரணங்களும் எப்போதும் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கும் இது உதவும்” என்று கோலாலம்பூரில் இன்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுங்கை சிரே சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பயனீட்டாளர் வளாகத்தின் இருப்பிடத்தின் தூரம் மற்றும் விநியோக அமைப்பின் நீர் அழுத்தத்தைப் பொறுத்து நீர் விநியோகத் தடை, மறுசீரமைப்பின் காலம் பரப்பளவில் மாறுபடும் என்று அவர் கூறினார்.

“இந்த திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை காலத்தில் பாதிக்கப்பட்ட பயனீட்டாளருக்கு போதுமான நீர் விநியோகத்தை பராமரிக்கவும், விவேகத்துடன் தண்ணீரைப் பயன்படுத்தவும் ஆயர் சிலாங்கூர் அறிவுறுத்த விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

மேலும் தகவலுக்கு, பயனர்கள் ஆயர் சிலாங்கூர் வலைத்தளத்தை www.airselangor.com மற்றும் ஆயர் சிலாங்கூர் கைபேசி பயன்பாடு, முகநூல் , இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு பக்கங்களையும் அணுகலாம்.