Home One Line P2 டிரம்புக்கு கொவிட்19 அறிகுறிகள் எதுவும் இல்லை

டிரம்புக்கு கொவிட்19 அறிகுறிகள் எதுவும் இல்லை

637
0
SHARE
Ad

வாஷிங்டன்: அதிபர் டொனால்டு டிரம்பிற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாக கொவிட்19 அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இல்லை என்றும் அவரது தனிப்பட்ட மருத்துவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதிலிருந்து அதிபருக்கு கூடுதல் பிராணவாயு (ஆக்சிஜன்) தேவைப்படவில்லை என்று டாக்டர் சீன் கான்லி தெரிவித்தார்.

“உடல் பரிசோதனை, பிராணவாயு செறிவு மற்றும் சுவாச வீதம் அனைத்தும் நிலையானதாகவும் இயல்பாகவும் இருக்கின்றன” என்று அறிக்கை கூறுகிறது.

#TamilSchoolmychoice

“நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்போம், மேலும் தகவல் இருந்தால் நான் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்” என்று கான்லி கூறினார்.

டிரம்ப் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

டிரம்பிற்கும் ஜோ பைடெனுக்கும் இடையிலான இரண்டாவது விவாதம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தாம் நல்ல நிலையில் இருப்பதாகவும், பணிக்குத் திரும்புவதாகவும் டிரம்ப் கூறினார்.

இதற்கிடையில், டிரம்ப் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின்னர், வெள்ளை மாளிகை புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவரது உதவியாளர்கள் சிலர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3- ஆம் தேதி நடைபெறுகிறது.