Home One Line P1 அம்னோவின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரை ஆதரிக்கவில்லை

அம்னோவின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரை ஆதரிக்கவில்லை

738
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா: புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் திட்டத்தை அம்னோ கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கவில்லை என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அசிஸ் தெரிவித்தார்.

முன்னாள் துணைப் பிரதமரை ஆதரித்து, எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே அம்னோவில் பதற்றம் நிலவுகிறது என்ற செய்தியை அவர் நிராகரித்தார்.

“அம்னோவில் எதுவும் நடக்கவில்லை. அம்னோவைச் சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்வாரின் முயற்சியை ஆதரிக்கவில்லை என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். ”

#TamilSchoolmychoice

நேற்று, பெயர் குறிப்பிட மறுத்த 3 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 குழுக்களாகப் பிரிந்துள்ளதாகக் கூறினர்.

“சமூக ஊடகங்களில் இதை கடுமையாக மறுத்தவர்களைத் தவிர, மற்றவர்களுடன் நான் பேசியுள்ளேன், அவர்கள் அன்வாரின் திட்டத்தை ஆதரிக்கவில்லை என்பதை அவர்கள் என்னிடம் உறுதிப்படுத்தினர்.” என்று நஸ்ரி கூறினார்.

அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் என்றபடியால், அவர்கள் அன்வாரை ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.

“அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபடுவார்கள். நாங்கள் எடுக்கும் எந்த முடிவும் கூட்டாகவே இருக்கும். இந்த பிரச்சனையில் எங்கள் நிலைப்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படாமல் இருக்க இதை விளக்குகிறேன். ” என்று அவர் குறிப்பிட்டார்.