Home One Line P1 சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்

சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்

504
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் முன்னணிப் பணியாளர்கள் கொவிட்19 தொற்றுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

மாநிலத்தில் தொற்று சங்கிலியை உடைக்க பல உத்திகள் மற்றும் அணுகுமுறைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

“எங்கள் திட்டம் சமூக கண்காணிப்பு, பாதிக்கப்பட்ட அனைவரையும் கண்டுபிடிப்பது, சோதிப்பது, தனிமைப்படுத்துவது மற்றும் சிகிச்சையளிப்பது, மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடிவதன் மூலம் நோய்த்தொற்றின் சங்கிலியை தகர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது” என்று அவர் டுவிட்டரில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நாட்டில் நேற்று 561 புதிய கொவிட்19 நோய்த்தொற்றுகள் பதிவாகின. சபாவில் அதிகபட்சமாக – 488 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.

133 பேர் நேற்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள நிலையில், மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 10,913- ஆக உயர்ந்துள்ளது.

561 புதிய சம்பவங்களைத் தொடர்ந்து, நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 15,657 ஆக உள்ளது என்றும் அவர் கூறினார்.

மொத்தம் 4,587 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 90 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர், 29 பேருக்கு சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

இரண்டு பேர் நேற்று மரணமுற்ற நிலையில், மரணங்களின் எண்ணிக்கை 157- ஆக அதிகரித்துள்ளது.