Home One Line P1 ‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

694
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.

இது அரசாங்கம் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவரவும் உதவும் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்பின் 55 (2) வது பிரிவுபடி, “மாமன்னர் நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாக நிறுத்தலாம் அல்லது கலைக்கலாம்” என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதால், பொது ஒழுங்கு, பொருளாதாரம், வாழ்க்கை மற்றும் அரசியல் நிலைத்தன்மையை பேணுவதற்கு பாதுகாப்பானது என்று விக்னேஸ்வரன் கூறினார்.

“நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படும் போது, நாடாளுமன்றத்தின் அமர்வு நிறுத்தப்படும். மேலும் நாட்டின் விவகாரங்கள் தொடர்ந்து நிர்வகிக்கப்பட்டு தற்போதைய அரசாங்கத்தால் நடத்தப்படும்.”

தற்போதைய அரசியல் உறுதியற்ற தன்மைக்கு மத்தியில் தற்போது இதுவே சிறந்தது என்று அவர் கூறினார். கொவிட்19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் இப்போது பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பது மோசமான முடிவாக இருக்கும் என்று அவர் எச்சரித்தார்.

தொற்றுநோய் சீரானதற்குப் பிறகு அல்லது பாதுகாப்பான பொதுத் தேர்தலை நடத்துவதற்கான நிலைமைகள் தெளிவாக இருந்தால், இந்த நிறுத்தத்தை மீண்டும் மீட்டுக் கொள்ளலாமென்று அவர் கூறினார்.

இதனிடையே, பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறி மாமன்னரைச் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து மொகிதின் யாசினுக்கான ஆதரவை அனைத்து கட்சிகளும் தெரிவித்து வந்தன.

இது குறித்து மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரனும் விரைவில் மாமன்னரை சந்திப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும், தற்போது அரண்மனை தரப்பு இந்த சந்திப்புகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.