Home One Line P1 அக்டோபர் 16-இல் அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார்

அக்டோபர் 16-இல் அன்வார் காவல் துறையில் வாக்குமூலம் அளிப்பார்

754
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நாளை புக்கிட் அமானில் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படுவார். அவர் அடுத்த பிரதமராகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் குறித்து வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரின் கூற்று தொடர்பாக இதுவரை 113 காவல் துறை புகார் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று புக்கிட் அமான் இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

“தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

#TamilSchoolmychoice

“சமூக ஊடகங்களில் பரவியிருக்கும் கூற்று குறித்து நாங்கள் இன்னும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

சமூகத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக, நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எந்தவொரு அறிக்கைகளையும் வதந்திகளையும் விநியோகிக்கவோ வெளியிடவோ கூடாது என்று ஹுசிர் பொதுமக்களுக்கு நினைவுபடுத்தினார்.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி அன்வார் செவ்வாய்க்கிழமை மாமன்னருடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார்.

பின்னர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமானங்கள் மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் ஆதரவை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட ஆவணங்களை அவர் மாமன்னரிடம் சமர்ப்பித்ததாகக் கூறினார்.

இருப்பினும், இஸ்தானா நெகாரா பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் தன்னை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எந்த பட்டியலையும் முன்வைக்கவில்லை, மாறாக அவர் எண்ணிக்கையை மட்டுமே தெரிவித்தார் என்று கூறியது.