Home One Line P2 ‘800’ படத்தில் நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்புகள்!

‘800’ படத்தில் நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு எழும் எதிர்ப்புகள்!

722
0
SHARE
Ad

சென்னை: டுவிட்டரில் நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ்டேக் பிரபலமாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபலமான இவர் பல வெற்றிப்படங்களைத் தந்துள்ளார்.

எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கிய வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை சித்தரிக்கும் இப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்தின் முதல் தோற்றம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதற்கான அவரது முடிவில் பொது மக்கள் கோபப்பட்டு வருகின்றனர். அவரது இரசிகர்கள் பலரும் கோபமடைந்துள்ளனர்.

கடந்த காலத்தில் இலங்கையை உலுக்கிய மற்றும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட உள்நாட்டுப் போரின் சோகமான சம்பவங்களை பலர் நினைவு கூர்ந்தனர். இயக்குனர் சீனு ராமசாமி, சேரனும் தங்களது கவலையை வெளிப்படுத்தியதோடு, அந்த பாத்திரத்தை மறுபரிசீலனை செய்யுமாறு நடிகரிடம் கேட்டுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

ஒரு சிலர் நடிகருக்கு ஆதரவாக பேசுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இது அவரது வேலை, அவர் ஒரு வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார், யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

இத்திரைப்படத்திற்கு ‘800’ என்று பெயரிட்டுள்ளனர். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், இப்படத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் இலங்கைத் தமிழர்கள் சார்பில் இத்திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு பெரியளவில் பரவியது.

தற்போது, இயக்குநர் பாரதிராஜாவும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிகக் கடினம் என்றும், பொதுமக்கள் வெகு சீக்கிரமாகவே அவரிடம் நெருங்கியதாகவும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இறந்தபோது சிங்கள இனவாதத்திற்கு ஆதரவாக நின்றவர் இந்த முத்தையா என்று அவர் கூறினார். விளையாட்டில் பெரிய அலவில் சாதித்து, சொந்த மக்கள் இறந்தபோது அதனைக் கொண்டாடியவர் இவர் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கூடுமான வரையில் இப்படித்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.