Home One Line P1 மாமன்னர் அங்கீகரித்த அரசை ஆதரிக்க கூட்டணிக் கட்சிகளை பாஸ் வலியுறுத்துகிறது

மாமன்னர் அங்கீகரித்த அரசை ஆதரிக்க கூட்டணிக் கட்சிகளை பாஸ் வலியுறுத்துகிறது

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான மாமன்னர் அங்கீகரித்த அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறு மத்திய அரசாங்கத்தில் உள்ள அரசியல் கட்சிகளை பாஸ் வலியுறுத்தியுள்ளது.

மார்ச் மாதத்தில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டபோது, ​​மத்திய அரசியலமைப்பின் கீழ் மாமன்னர் தனது தனிச்சிறப்பு மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட்டார் என்று பாஸ் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசன் கூறினார்.

“எனவே, தற்போது பிரதமராக மொகிதின் தலைமையிலான ஆட்சியை மாமன்னர் அங்கீகரித்ததை அனைத்து அரசியல் கட்சிகளும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று பாஸ் கேட்டுக்கொள்கிறது. அரசாங்கம் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்பட முடியும் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் முழு ஆதரவையும் வழங்க வேண்டும்.

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, ஜிபிஎஸ், பாஸ் மற்றும் கபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவை மக்கள் நலனில் முன்னுரிமை அளிப்பதன் மூலமும் கவனம் செலுத்துவதன் மூலமும் கூட்டாகவும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அம்னோ பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான்,தேசிய கூட்டணிக்கு அளிக்கும் ஆதரவைப் பற்றி அம்னோ யோசிப்பதாகவும், அரசியல் ஒத்துழைப்பு தொடரும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கத்திற்கு புதிய விதிமுறைகளை முன்வைப்பதாகவும் கூறினார்.

முவாபாக்காட் நேஷனலை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அம்னோ முன்மொழிகிறது என்றும் அவர் கூறினார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை மாமன்னரை சந்தித்தப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது.