Home One Line P1 கொவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்!

கொவிட்-19 சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும்!

648
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புதிய கொவிட் -19 சம்பவங்களால் சபா தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று பதிவான புதிய தொற்றுநோய்களில் 578 அல்லது 68.2 விழுக்காடு சபாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 18 அன்று 49 சம்பவங்களுடன் பதிவான கெபாயான் சிறை தொற்றுக் குழு, நேற்றைய சம்பவங்களில் 155 சம்பவங்களுக்கு பங்களித்தது. நேற்றைய நிலவரப்படி, இந்த தொற்றுக் குழுவில் மொத்தம் 582 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபா ஊராட்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் டத்தோஸ்ரீ மாசிடி மஞ்சுன், கெபாயான் தொற்றுக் குழு தொடர்ந்து மாநிலத்தில் அறிவிக்கப்படும் தினசரி சம்பவங்களை உயர்த்தக்கூடும் என்று தனது கவலையை தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கெபாயான் சிறையில் சுமார் 2,700 கைதிகள் உள்ளனர்.

கிள்ளான் பள்ளத்தாக்கு மாநிலங்களில் 164 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அல்லது 847 புதிய சம்பவங்களில் 19.4 விழுக்காடு நேற்று நாடு தழுவிய அளவில் பதிவாகியுள்ளன. இவற்றில் ஐந்து சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

மலேசியாவின் மொத்த கொவிட் -19 சம்பவங்கள் இப்போது 23,804 ஆகவும்,  8,183 பேர் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.