Home One Line P1 வரவு செலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்!- கிட் சியாங்

வரவு செலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்தி வையுங்கள்!- கிட் சியாங்

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021- ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு ஜசெகவின் லிம் கிட் சியாங் அரசாங்கத்தை கோரியுள்ளார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதனை கூர்ந்து ஆராய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும்போது வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே இது என்று அவர் தெரிவித்தார்.

“நவம்பர் 6, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 2021 வரவுசெலவுத் திட்டத்தை நவம்பர் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும். இதனால் 2021 வரவுசெலவுத் திட்டம் தேசிய கூட்டணி அரசாங்கம் மற்றும் நம்பிக்கைக் கூட்டணி எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்புகளின் திட்டங்களையும் இணைத்து 2021 வரவுசெலவுத் திட்டத்தை உறுதி செய்ய முடியும், நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும், ”என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உலகளவில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், மலேசியா உலகில் 87- வது இடத்தில் உள்ளது என்றும் இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

அக்டோபர் 24 மற்றும் 26 சம்பவங்கள் தலா 1,228 மற்றும் 1,240 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தாலும், மலேசியா தனது சம்பவங்களை மூன்று இலக்கங்களாகக் குறைக்க முயற்சிக்கிறது.

எனவே, ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இந்நேரத்தில், கொவிட் -19 தொற்றுநோய்களில் மலேசியாவில் உயிர்களையும், வாழ்வாதாரங்களை காப்பாற்ற 2021 வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றம் அறிவிக்கட்டும். கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போரில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி இருவரின் கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் ஒத்துழைப்பாக இது இருக்கட்டும் ” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று வரை, மலேசியாவில் 30,889 நபர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 249 ஆக உள்ளது.