Home One Line P1 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக நஜிப் நியமனமா?

தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக நஜிப் நியமனமா?

589
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (நவம்பர் 2) நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் அமைச்சரவையில் இடம் பெறாத தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய முன்னணி தற்போது மத்திய அரசாங்கத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அமைச்சரவையில் அமைச்சர்களாகவோ, துணையமைச்சர்களாகவோ இடம் பெறாதவர்கள் நாடாளுமன்ற பின்னிருக்கையாளர்கள் என அழைக்கப்படுவர். ஆங்கிலத்தில் இவர்களை ‘பேக் பெஞ்சர்ஸ்’ என அழைப்பர் (backbenchers).

அரசாங்கக் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தற்காப்பதும், வாதாடுவதும், விவாதங்களில் ஈடுபடுவதும் இவர்களின் நாடாளுமன்றப் பணியாகும்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி நாடாளுமன்ற பின்னிருக்கை உறுப்பினர்களுக்கான தலைவராக நஜிப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, மேல் முறையீட்டு விசாரணைக்காகத் தற்போது காத்திருக்கிறார்.

இந்நிலையிலும் அவருக்கான அரசியல் செல்வாக்கு குறையவில்லை என்பதைக் காட்டுவதற்காக இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

பெர்சாத்து, அம்னோ கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் மோதல்களை நாடாளுமன்றத்தில் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் நஜிப் இந்தப் பதவியின் மூலம் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 44 ஆண்டுகாலத்தைக் கொண்ட அவரது நாடாளுமன்ற அனுபவம் இந்த இக்கட்டான, நெருக்கடி சூழ்நிலையில் ஆளும் தேசியக் கூட்டணி தரப்புக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.