கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் இன்று பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் ஆகஸ்ட் மாதம் புதிய மலாய் கட்சியை உருவாக்கிய ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் கல்வி அமைச்சரும் ஒருவர்.
நேற்று பெஜுவாங் கட்சி 2021 வரவு செலவு திட்டம் குறித்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் அவரது பெயர் இல்லாததை அடுத்து மஸ்லீயின் நிலை கேள்விக்குறியானது.
ஆயினும், அவர் தற்போது சைட் சாதிக் தலைமையில் புதிதாக அமைக்கப்பட்ட மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியுடன் (முடா) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
“ஆமாம், நாங்கள் டாக்டர் மஸ்லீயுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்று முடாவின் கட்சியின் வட்டாரம் தெரிவித்துள்ளது.