Home One Line P1 சபாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன!

சபாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன!

444
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபாவில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் சில பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை திருத்த தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

மக்கள் தங்கள் பகுதியில் இல்லாத அடிப்படை தேவைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்கு இந்த நடைமுறை என்று அவர் கூறினார்.

“இந்த நேரத்தில் செயல்படுத்தப்பட்ட கட்டுப்பாடு நடைமுறை, உள்ளூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளை காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை செயல்பட அனுமதித்துள்ளது,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

புதிய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைபடி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு பிரதிநிதியை காவல்துறையின் அனுமதியுடன் அப்பகுதியை விட்டு வெளியேற வங்கியில் பணம் எடுக்கவும், பிற அடிப்படை தேவைகளை வாங்கவும் அனுமதிக்கிறது.

கட்டுப்பாடு உள்ள பகுதியில் சந்தைகளும் வாரத்தில் இரண்டு நாட்கள், காலை 6 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.