Home One Line P2 பைடன் 220, டிரம்ப் 213- கடும் போட்டி நிலவுகிறது

பைடன் 220, டிரம்ப் 213- கடும் போட்டி நிலவுகிறது

780
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடென் வெள்ளை மாளிகைக்கான போட்டியில் களம் இறங்கிய நிலையில், வாக்கெடுப்புகள் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்து, உலக மக்கள் இப்போது முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

இந்தியானா, கெந்தக்கி, மிசோவ்ரி, ஓக்லஹோமா மற்றும் டென்னசி உள்ளிட்ட 17 மாநிலங்களில் குடியரசுக் கட்சி வெற்றிபெறியுள்ள நிலையில், பைடென் தனது சொந்த மாநிலமான டெலாவேர் மற்றும் கலிபோர்னியா, நியூயார்க் மற்றும் அமெரிக்க தலைநகரம் உட்பட 16 மாநிலங்களை கைப்பற்றியுள்ளார்.

எசோசியட் பிரேஸ் அடிபடையில், ஜோ பைடன்  220 வாக்குகள் தொகுப்பைப் பெற்றுள்ளார். டிரம்பிற்கு அதிகபட்சமாக 213 வாக்குகள் தொகுப்பு கிடைத்துள்ளது.

#TamilSchoolmychoice

270 வாக்குகள் தொகுப்பைப் பெற்று வெள்ளை மாளிகையைக் கைப்பற்ற இருக்கும் வேட்பாளர் யார் எனும் கேள்வியின் பதிலுக்காக இன்னும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் .