Home One Line P2 பெரிய வெற்றியை அறிவிக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு

பெரிய வெற்றியை அறிவிக்க இருப்பதாக டிரம்ப் அறிவிப்பு

774
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதன்கிழமை அதிகாலை தான் தேர்தலில் வெற்றி பெற்றதாக, விரைவில் ஓர் அறிக்கையை வெளியிடுவார் என்று கூறினார்.

“நான் இன்றிரவு ஓர் அறிக்கையை வெளியிடுவேன். ஒரு பெரிய வெற்றி!” என்று டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியினர் தேர்தலைத் திருட முயற்சிப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் அதை ஒருபோதும் செய்ய விடமாட்டோம். வாக்கெடுப்புகள் மூடப்பட்ட பின்னர் வாக்களிக்க முடியாது!” என்று அவர் கூறினார்.

அவரது டுவிட்டர் பதிவுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஜனநாயக போட்டியாளரான ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெற “பாதையில்” இருப்பதாகக் கூறினார்.

பிபிசி செய்தியின்படி, ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் 220 வாக்குகள் தொகுப்பைப் பெற்றுள்ளார். டிரம்ப் 213 வாக்குகள் தொகுப்பைப் பெற்றுள்ளார்.