Home 13வது பொதுத் தேர்தல் பினாங்கு – கப்பளா பத்தாஸ் தொகுதியில் படாவிக்கு பதிலாக ரீசால் மெரிக்கன் தேர்வு

பினாங்கு – கப்பளா பத்தாஸ் தொகுதியில் படாவிக்கு பதிலாக ரீசால் மெரிக்கன் தேர்வு

645
0
SHARE
Ad

236x283xea7bbaf250e6f391a3fb6711964b497a.jpg.pagespeed.ic.cZTARzc9o8ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 16 –  பினாங்கு மாநிலம் கப்பளா பத்தாஸ் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட, அத்தொகுதியின் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கன் நைநா மெரிக்கன் (படம்) தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனால் கப்பளா பத்தாஸ் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான துன் அப்துல்லா அகமத் படாவி, பொதுத்தேர்தலில்  வேறு தொகுதிக்கு இடம் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு, பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு எதிராக, மலேசிய டெலிகாம் நிறுவனத்தின் பொது மேலாளர் டாக்டர் மஸ்லான் இஸ்மாயில் களமிறங்கவுள்ளார்.