வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று முடிந்து 4 நாட்கள் இழுபறி நிலையில் இருந்து வந்த வாக்கு எண்ணிக்கை ஒருவழியாக முடிவடைந்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கமலா ஹாரிஸ் முதலாவது இந்திய வம்சாவளி துணையதிபராகப் பதவியேற்கும் திருப்பமும் நிகழவிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஜோ பைடன் முன்னணியில் இருந்து வரும் நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குகள் தொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் டிரம்ப் பிரச்சாரக் குழு வழக்குகள் தொடுத்திருந்தன. அந்த வழக்குகளை அமெரிக்க நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.
(மேலும் விவரங்கள் தொடரும்)